ஹட்டன் அருகே காட்டுத்தீ: வனப்பகுதிக்கு பெரும் சேதம்

Report Print Aasim in சமூகம்
28Shares

ஹட்டன் - டிக்கோயா அருகே பரவி வரும் காட்டுத்தீ காரணமாக வனப்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றின் மேற்புறமாக உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றிலேயே இவ்வாறு காட்டுத் தீ பரவியுள்ளது.

இன்று மாலை சுமார் 4 மணியளவில் பரவத் தொடங்கிய தீயை அணைக்கும் முயற்சியில் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய உலர் காலநிலை காரணமாக காட்டுத் தீ வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.