பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்ய திட்டம்

Report Print Kamel Kamel in சமூகம்

பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என கொழும்பு சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் நீதிமன்றின் ஊடாக பிரிகேடியரை கைது செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

பிரிகேடியர் லண்டனிலிருந்து இலங்கை திரும்புவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, பிரிட்டன் தமிழர் பேரவையைச் சேர்ந்த சட்டவல்லுனர் அர்ஜூன் சிவநாதனைக் கொண்டு முறைப்பாடு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்படவிருந்ததாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரிகேடியர் பிரியங்க பிரிட்டனை விட்டு வெளியேறிவிட்டார் என அறிந்து கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்த வழக்குத் தொடரும் முயற்சியை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பல ஈழவாதிகள் கடமையாற்றி வருவதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.