கம்பஹா மாவட்டத்தின் பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவன் பஸ்பொட்டா என்றழைக்கப்படும் நபர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் கம்பஹா பிரதேசங்களில் நடைபெற்ற பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் பஸ்பொட்டா தொடர்புபட்டிருந்ததுடன், பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்திருந்தான்.
இந்நிலையில் நேற்றைய தினம் உடுகம்பல பிரதேசத்தில் அவன் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் மோப்ப நாய்கள் சகிதம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பஸ்பொட்டா கைது செய்யப்பட்டுள்ளான்.
அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்து டீ-56 ரக துப்பாக்கி, அமெரிக்கத் தயாரிப்பான தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் மி.மீ.3.8 ரக கைத்துப்பாக்கி என்பனவும் அவற்றுக்கான ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் பஸ்பொட்டாவின் பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த மேலும் இரண்டு வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.