இலங்கையர் இருவருக்கு நீதிமன்றம் விதித்த கடும் உத்தரவு!

Report Print Samy in சமூகம்
122Shares

நீதிமன்றில் ஆஜராகாத இலங்கை அகதிகள் இரண்டு பேருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அங்கு வசித்து வந்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

திருச்சி, ஆரணி, புதுச்சேரி, சென்னை போன்ற முகாம்களில் தங்கியிருந்த 11 பேர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்வதற்காக, திருவாடானை அருகே உள்ள ஓரியூரில் வாடகை கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்து டிராவல்ஸ் ஏஜன்ட் மூலம் எஸ்.பி.பட்டினம் கடல் வழியாக செல்ல திட்டமிட்டிருந்த அவர்களை இராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ் வழக்கு விசாரணையின் போது நீண்ட நாளாக நீதிமன்றில் ஆஜராகாததால் கலிஸ்திஸ், டேவிட்ராஜன் ஆகியோருக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதவான் இன்பகார்த்திக் உத்தரவிட்டார்.

- Dina Malar