வவுனியாவில் நபரொருவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில்

Report Print Theesan in சமூகம்
107Shares

வவுனியா - செட்டிக்குளம், சண்முகபுரத்தில் காட்டு யானை தாக்கி காயமடைந்த நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது ராமசாமி லோகநாதன் எனும் 58 வயதான நபரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் நேற்று காலை மாட்டை மேச்சலுக்காக காட்டிற்கு கொண்டு சென்று மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார்.

இதன்போதே அவர் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அவரின் சத்தம் கேட்டு காட்டிற்கு சென்ற அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.