இலங்கைல் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு

Report Print Kamel Kamel in சமூகம்
2013Shares

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட உள்ளது.

அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில் அரசாங்க சேவையில் நீடித்திருக்கக்கூடிய உச்சபட்ச வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.