சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்
39Shares

பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் விவசாய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.