வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திலிருந்து எரிபொருளை திருடிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து எரிபொருள் கொள்கலன் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் எரிபொருள் விற்பனை நிலையத்திலிருந்து எரிபொருளை திருடி தனியாருக்கு பல நாட்களாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் நேற்று இரவு எரிபொருள் கொள்கலன் வாகனத்தினை கைப்பற்றியதுடன், வாகனத்தின் சாரதி உட்பட 9 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.