ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஐந்து கோடி ரூபா நட்டம்

Report Print Kamel Kamel in சமூகம்
291Shares

விமானப் பயணங்கள் தாமதமடைந்த காரணத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஐந்து கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவ்வாறு விமானப் பயணங்கள் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் கால தாமதமடைந்துள்ளன.

கடந்த வாரத்தில் மட்டும் இவ்வாறு பத்து விமானப் பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

இவ்வாறு விமானப் பயணங்கள் காலம் தாமதித்த காரணத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.