சீனாவின் பட்டுப்பாதை திட்டம் இலங்கையர்களுக்கு நன்மை பயக்கக்கூடியது என சீனாவுக்கான இலங்கை தூதர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றை பார்க்கும்போது, அவை ஏனைய நாடுகளை ஆக்கிரமித்து வந்துள்ளன.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேற்குலக முதலாளித்துவ வாதிகள் கூறும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
இதன்மூலம் அந்த நாடுகளை தமது மக்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தியுள்ளன.
சீனாவின் பட்டுப்பாதை திட்டமானது இலங்கைக்கு நன்மைப் பயக்கக்கூடியது. எனவே, நாம் அதனை ஆதரித்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.