துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவன்! ஒருவர் கைது

Report Print Shalini in சமூகம்
276Shares

சிலாபம் - இரணவில பகுதியில் சிறுவன் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மை நாட்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய சிறுவன் கடந்த 25 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து குறித்த சிறுவன் 27 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாயாறு பகுதியில் வைத்து பொன்சேகா எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.