முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள், மின்பிறப்பாக்கி என மேலும் சில பொருட்களை இதன்போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், இது தொடர்பான மெலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.