சீன நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அவரை கைது செய்துள்ளது.
சுமார் 78 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர் எனவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.