சிவனொளிபாதமலைக்கு கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 8 பேரை நேற்றைய தினம் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த 8 பேரிடமும் இருந்து, ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோரா என்ற மோப்பநாயின் உதவியுடன், ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் வைத்து இவர்கள் எட்டுபேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.