தமிழ் மக்களுக்கு நீதி வழங்க இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் பிறப்பிக்க வேண்டும்

Report Print Kumar in சமூகம்
60Shares

தமிழ் மக்களுக்கு நீதி வழங்க தேவையான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை இலங்கையில் தலையீடுகளை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் பொறிமுறையினை இலங்கையில் அமுல்படுத்தவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதாபிமான மீறல்கள், யுத்த குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறுகின்ற விடயங்களில் இருந்து இலங்கை தப்பித்துவருவதாகவும் இங்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பான விடயங்களை ஐ.நா பாதுகாப்பு சபையிடம் ஒப்படைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ் மக்களும் இணைந்து குரல் கொடுப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் போராட்டத்தின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.