யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் தான் அணிந்திருந்த மேற்சட்டை (T-Shirt)யை பயன்படுத்தி தூக்கு போடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இதை அவதானித்த சக கைதிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை காப்பாற்றி அச்சுவேலி பிரேத வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.