வாழைச்சேனை, செம்மண்ணோடை பகுதியில் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேசன் உபகரணம், மீனவர் காப்பக மேலங்கி, சைக்கிள் என பல்வேறான உதவிப்பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செம்மண்னோடை வட்டார தலைவர் எஸ்.சம்மூன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டுள்ளார்.
மேலும், அதிதிகளாக சட்டத்தரணி ராசிக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு பொருளாளர் ஹக்கீம், ஆசிரியர் அல்பதாஹ், வட்டாரக் குழு உறுப்பினர்களான லத்தீப், மீராசாஹிபு, நவாஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.