13 வயது மாணவனை காணவில்லை! தகவல் தெரிந்தால் கூறுங்கள்

Report Print Rusath in சமூகம்
90Shares

ஏறாவூர் - மிச்நகர், தாமரைக்கேணி கிராமத்தில் வசித்து வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாமரைக்கேணி அலிஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கற்கும் முஹம்மது அனீஸ் முஹம்மது இர்ஷாத் (வயது 13) என்ற மாணவனே கடந்த வியாழக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மாலை 4 மணியளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

அதேவேளை, தனது மகன் கொண்டு சென்ற சைக்கிள் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பஸ் தரிப்பிடத்திற்குச் அருகிலுள்ள வீடொன்றில் இருப்பது தெரியவந்தது.

அங்கு சைக்கிளை வைத்து விட்டு தான் காத்தான்குடிக்குச் செல்வதாகவும் பின்னர் வந்து சைக்கிளை எடுத்துக் கொள்வதாகவும் அந்த வீட்டாரிடம் கூறிவிட்டு சென்றதாக அறியக் கிடைத்தது என காணாமல் போன சிறுவனின் தாய் பாத்திமா ஸபிய்யா தெரிவித்தார்.

இந்தச் சிறுவனைப் பற்றிய ஏதாவது விபரங்கள் தெரிந்தால் 0652240487 எனும் ஏறாவூர் பொலிஸாரின் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0754392285 எனும் தமது தொலைபேசி இலக்கத்துக்கோ தயவுடன் அறியத் தருமாறு காணாமல் போன சிறுவனின் தந்தை முஹம்மது அனீஸ் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.