இலங்கை அகதிகள் மீது தாக்குதல்! சகோதரர்களுக்கு எதிராக வழக்கு

Report Print Murali Murali in சமூகம்
174Shares

தமிழகம், பவானிசாகர், இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான தம்பதியினரின் உறவினர்களுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது தாயை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலை அகதிகள் முகாமிற்கு சென்ற நிலையில், 31 வயதான சுஜன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது காயமடைந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வன்னியம்பட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.