புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருந்த நபர் கைது

Report Print Rusath in சமூகம்
98Shares

புத்தரின் உருவப்படம் பதியப்பட்ட ஆடைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை நகர் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கடையை சோதனையிட்டபோது புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட 10 சேலைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.