தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்! இந்திய ஊடகம் தகவல்

Report Print Murali Murali in சமூகம்
62Shares

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன், கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.

இதனால், படகு ஒன்றுக்கு 30 ஆயிரத்தில் இருந்து 40,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாரம்பரிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.