ஜனாதிபதியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வேலையற்ற பட்டதாரிகள்

Report Print Kumar in சமூகம்
249Shares

வேலையற்ற பட்டதாரிகளின் வரலாற்றில் மகஜர் ஒன்று ஜனாதிபதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில் உடனடியாக வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதியிடம் வேலையற்ற பட்டதாரிகளினால் நேற்றைய தினம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி கூட்டத்தின் போது, மகஜரில் குறிப்பிட்ட விடயங்களுக்கு தீர்வினை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் காந்திபூங்காவில் கூடிய பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஒட்டுமொத்த பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி நல்ல முடிவினை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இது பட்டதாரிகளின் போராட்டத்திற்கு கிடைத்தவெற்றி என்றும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் கூறியுள்ளார்.