வடக்கில் தொடர்ந்தும் சேதமாக்கப்படும் சைவ ஆலயங்கள்: யாழில் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

வடக்கு பகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நேற்று காலை நடைபெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி கோவில் வீதி ஊடாக ஊர்வலமாக சென்று கைலாய பிள்ளையார் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது.

பின்னர், அங்கிருந்து முதலமைச்சர் இல்லத்தை சென்றடைந்து முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வட மாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாசார அமைச்சருக்கு இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாகவும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.