வடக்கு வலயத்திற்கு மூன்று மாதங்களாக வலயக் கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - வடக்கு வலயத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழான வவுனியா வடக்கு வலயத்தில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிறிஸ்கந்தராஜா கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. எனினும், மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.

இதனால் வலயக்கல்விப் பணிப்பாளர் இன்றியே பாடசாலையின் முதலாம் தவணைக் காலம் முடிவடையவுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.