இலங்கையில் தலைவிரித்தாடும் வன்முறைகள்! பிக்கு ஒருவர் எடுத்துள்ள புதிய முயற்சி

Report Print Shalini in சமூகம்

இலங்கை முழுவதும் வாழும் மக்கள் அண்மைக் காலங்களில் ஒருவிதமான அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

அம்பாறை, கண்டி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்ததுடன், இலங்கை முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

சமூகவலைத்தளங்கள் மூலமும் இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, இந்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் குறித்த மோதல்களை தடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில், நாட்டில் சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வண. கல்கந்தே தம்மாநந்த தேரர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கைவிடுமாறும், அனைவரும் ஒன்றாக சமாதானத்துடன் இருக்குமாறும் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.