கிளிநொச்சியில் சிற்றூர்தி சேவையில் ஈடுபடுபவர்கள் பணிப்புறக்கணிப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, பரந்தன் முறிகண்டி சிற்றூர்தி சேவையில் ஈடுபடுபவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் சிற்றூர்தி நடத்துனரொருவர், இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார்.

சிற்றூர்தி உரிமையாளர்கள், தாக்கிய இளைஞர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டிய போதும் பொலிஸார் அவர்களை கைது செய்யாமையினை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சில நாட்களுக்கு முன்னரும் பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தியில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸார் போதுமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்தில் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் சிலர் நிற்பதனை அவதானித்த சிற்றூர்தி உரிமையாளர்கள் அவர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியதனை தொடர்ந்து 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.