அழிவடைந்து செல்லும் நிலையில் தமிழர்களின் பாரம்பரியங்கள்

Report Print Kumar in சமூகம்

தமிழர்களின் பாரம்பரியங்களும் கலை, கலாச்சாரங்களும் அழிவடைந்து செல்லும் நிலை காணப்படுவதாக குருமண்வெளி மஹாவிஸ்ணு நாகதம்பிரான் ஆலய பிரதமகுரு ஆச்சாரிய திலகம் சிவஸ்ரீ வ.யோகராசா குருக்கள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, குருமண்வெளியினை சேர்ந்த கலாபூசணம், கலைச்செம்மல் மு.தம்பிப்பிள்ளையின் இரண்டு நூல்கள் வெளியீட்டுவிழா இன்று காலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றுள்ளது.

வாழப்பிறந்தவள் என்னும் சிறுகதையும், புதுமைப்பெண் சுதந்திரப்பறவைகள் என்னும் நாவலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆசியுரையினை குருமண்வெளி மஹாவிஸ்ணு நாகதம்பிரான் ஆலய பிரதமகுரு ஆச்சாரிய திலகம் சிவஸ்ரீ வ.யோகராசா குருக்கள் நிகழ்த்தினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரிதாக மானிடப்பிறவினை எடுத்த நாம் கடந்த காலத்தில் அரிந்து அரிந்து குவிக்கப்பட்டோம். முன்னைய காலத்தில் இருந்த பக்தி நெறிமுறைகளும் தானதரும சிந்தனைகளும் கீழ்ப்படிவுகளும் தற்போது இல்லாத நிலையே இருந்து வருகின்றது.

மத விடயங்களும் தமிழ் விழுமியங்களும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாடுகள் எல்லாம் அருவி அழிவடைந்து செல்லும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான காலகட்டத்தில் இவ்வாறான நூல்கள் வெளிவருவதானது வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்த காலத்தில் ஏட்டுக்களில் உள்ள எமது பண்பாடுகளை நூலுருவாக்கம் செய்யப்படுவதையும் நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.