மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஏற்பாட்டில் தவக்கால இரத்ததான நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இளைஞர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாதுகாப்பு படையினர், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபம் உட்பட, சீலோம் வைத்தியசாலை, இருதயபுரம் இருதயநாதர் மண்டபம் மற்றும் தன்னாமுனை மியானி நகர் மண்டபம் போன்ற இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.