நீதி சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணிக்கு கௌரவிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
81Shares

நீதி சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலத்திற்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

1968ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி முதல் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கடந்த 50 ஆண்டு காலமாக ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் சேவையாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், கல்வியலாளர்கள், வர்த்தக பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.