திகன சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு இதுவே காரணம்?

Report Print Kamel Kamel in சமூகம்

பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரிகளுக்கு இடையிலான உள்முரண்பாடுகளே வன்முறைகள் வியாபிக்க காரணம் என புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய, திகன சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போனதற்கு பொலிஸ் திணைக்களத்திற்குள் அதிகாரிகளுக்கு இடையில் நிலவி வரும் போட்டித்தன்மையே காரணம் என புலனாய்வுப் பிரிவினர், அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கிய போதிலும், அந்த தகவல்கள் பொலிஸ் நிலையங்களைச் சென்றடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் இடம்பெற்றது முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சம்பவ இடத்திற்கு விஜயம் செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பூஜித் ஜயசுந்தர கண்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவர் எனவும் அவர் கண்டிக்கு விஜயம் செய்யாமை சர்ச்சைக்குரியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராணுவத் தளபதி உள்ளிட்ட பலரும் கண்டிக்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.