அரசியல் தொடர்பா? வெளிநாட்டு நிதியா? கண்டி வன்முறை தொடர்பில் தீவிர விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

கண்டி வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி வன்முறை தொடர்பில் அவசரகால நிலைமை ஒழுங்கு விதிகளில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட மொத்தமாக 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹாசேன் பலகாய என்ற அமித் வீரசிங்க உட்பட 10 பேர் பிரதான சந்தேகநபர்களாக இந்த வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் அரசியல் ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ளனரா? வெளிநாட்டு நிதியைப் பெறுகின்றனரா? வேறு அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா? ஆயுதங்களை வைத்துள்ளார்களா? என்ற அடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால நிலைமை ஒழுங்குவிதிகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நோக்கத்தின் அடிப்படையில் 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.