யாழ். கரவெட்டியில் கோயிலுக்கு அருகில் உள்ள கேணியில் சடலம்

Report Print Steephen Steephen in சமூகம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் கோயில் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கரவெட்டி கிராய் திருப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கோயில் மதில் சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அருகில் உள்ள கோணிக்குள் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

அப்போது அருகில் எவரும் இருக்காத காரணத்தில் கேணியில் விழுந்தவர் அதற்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிராய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான கந்தசாமி பாலசுப்பரமணியம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் கேணிக்குள் மிதந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.