காட்டு யானைகள் அட்டகாசம்: பிரதேச மக்கள் கவலை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை, குகனேசபுரத்தில் நேற்று நள்ளிரவு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது வளவில் இருந்த தென்னை மரங்கள், கனி தரும் மரங்களான மா, பலா மற்றும் கொய்யா போன்றவற்றை உணவிற்காக உட்கொண்டு விட்டு சேதத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேசத்தில் யானை வேலிகள் இடப்பட்டுள்ளன. அவை கடந்த சில மாதங்களாக சேதமடைந்து காணப்படுகின்றன.

அதனை திருத்தி அமைப்பதன் மூலம் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். இரவானதும் அச்சத்துடன் தூக்கமின்றி இருக்க வேண்டியுள்ளது.

சம்பந்தபட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.