தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Report Print Shalini in சமூகம்

தாய்லாந்தில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதிக்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர் அமைச்சகத்தின் மந்தமான பதிவு செய்யும் பணியால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்ட பிரதமர், அமைச்சக நிர்வாகத்தையும் கண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்தே, வரும் ஜூன் 30க்குள் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளதாக தெரிகிறது.

தற்போது, தாய்லாந்தில் 26 இலட்சத்திற்கும மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கி்னறமை குறிப்பிடத்தக்கது.