கண்டி கலவரங்களுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி மாவட்டத்தில் நடந்த கலவர சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் சகல தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கலவரத்தை திட்டமிட்டு சிலர் வழிநடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். பேருவளை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை விரைந்து கைப்பற்ற நினைக்கும் சிலர் இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.

கண்டி சம்பவங்களுடன் அரசியல்வாதிகள் சிலருக்கு தொடர்புள்ளது. விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.