சாரதியை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் கசுனின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில்

Report Print Steephen Steephen in சமூகம்

தனியார் பேருந்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைத்துப்பாக்கியுடன் பேருந்து சாரதியை தாக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அந்த காட்சியை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார்.

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.