கண்டி வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி

Report Print Murali Murali in சமூகம்

கண்டியில் - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கண்டி நகரில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது சி.சி.டி.வி கமெராவில் பதிவான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.