அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் பிலக்குடியிருப்பு மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு கிராமத்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு வருடங்கள் கடந்துள்ளபோதும் இன்னமும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த கிராமத்தில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது கருத்தை தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்திற்கு முன்னர் எனது காணிக்குள் வீடு ஒன்றை நான் கட்டியுள்ளபோதும் அது முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஓலைக்குடிசை ஒன்றை அமைத்து நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மேலும் எமது நிலைமையை அறிந்த அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதாக் வாக்குறுதிகள் வழங்கியுள்ளபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.

இவ்வாறு நிர்க்கதியான நிலையில் எனது குடும்பம் மட்டுமல்ல, இந்த கிராமத்தில் வசிக்கும் 47 குடும்பங்களுக்கும் இந்த நிலையில்தான் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் எடுத்து நிரந்தர வீடு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை செய்து தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.