கண்டி மக்களுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டியில் நடைபெற்ற வன்முறைகளால் சேதமடைந்த சொத்துக்கள் குறித்து முறையிடாதவர்கள், விரைவில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளில் பல கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தும் அழிவடைந்தும் உள்ளன.

இவைதொடர்பில் இதுவரையில் முறைப்பாடு செய்யாதவர்கள், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.