தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு மீது மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர, வெளிநாட்டு செய்தியாளர்களிடம் இந்த தகவலை கூறியுள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வேறு எந்த விடயங்களைக் காட்டிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.