உயிர் காக்க உதவி கேட்கும் இரண்டு பிள்ளைகளின் தாய்!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவைச் சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில வாரங்களுக்குள் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யாத பட்சத்தில் உயிராபத்து ஏற்படலாமென வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

எனவே, அவரது உறவினர்கள் O+ ( ஓ பொசிட்டிவ்) சிறுநீரகமொன்றை கொடையாளர்களிடம் இருந்து கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாயின் நிலையினை உணர்ந்த, சிறுநீரகம் ஒன்றினை தானம் செய்யக்கூடிய கொடையாளர்கள் 0771060140 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.