கனடாவிலிருந்து யாழ். வந்த நபர் சடலமாக மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் இன்றைய தினம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். நேற்றைய தினம் உறவினர்கள் வெளியில் சென்றிருந்தனர்.

எனினும், இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயலவர்கள் கதவினூடாக அவதானித்த போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.