சவூதியில் இலங்கை தமிழ் பெண் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

சவூதி அரேபியாவில் இலங்கை தமிழ் பணிப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மேலும் கூறியுள்ளது.

சவூதியில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்த 42 வயதான பிரியங்கா ஜெயசங்கர் என்ற தமிழ் பெண், அந்நாட்டு பிரஜை ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம், Al-Ras வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், தற்கொலை செய்துகொண்ட 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.