இலங்கை வான் படையின் நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை சுற்று மதில் உடைப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - கனகபுரம் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் நேற்று இரவு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஊடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுமதில் இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.