51 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 12ம் திகதி வரை ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.நஜீப்ஹான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள அரச திணைக்களங்கள், மற்றும் வீடுகளுக்குச் சென்று அப் பகுதியின் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பாக அவதானிப்பதுடன் டெங்கு தாக்கத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் பொது மக்களை விழிப்படைய செய்யும் நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேரு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை விசுரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.நஜீப்ஹான் மேலும் தெரிவித்தார்.