கண்டி வன்முறை பிரதான சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டி வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் தொலைப்பேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி – குண்டசாலையில் உள்ள குறித்த பிரதான சந்தேகநபரது அலுவலகத்தில் இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்து பெற்றோல் குண்டுகள், இனவன்முறையை தூண்டும் வகையிலான பிரச்சார பொருட்கள் ஆகியவற்றுடன், அவர்கள் பல்வேறு இடங்களில் நிதியைப் பெற்றுக் கொண்டமைக்கான பற்றுச்சீட்டுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவருக்கு உள்வந்த மற்றும் வெளிச்சென்ற தொலைபேசி அழைப்புகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.