காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்: ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

கட்டைக்காட்டு கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நேற்று அதிகாலை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

குறித்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஆழ்கடல் மீன் பிடித்தொழிலுக்குச் சென்ற, நாயாற்றுபகுதி மீனவர்களில் மூன்று பேர் இன்னமும் கரைக்கு திரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஆழ்கடலில் காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், இன்றைய தினம் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது.

உயிரிழந்தவர் தேவதாஸ் ஜூலி அலக்கஷன் (38 வயது) என்ற பெயருடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.