சமூக வலைதளங்கள் முடக்கம் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் உரிமை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, தாம் அரசாங்க அதிகாரிகளுக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் நல்ல நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலர் அதனை நாட்டை சீரழிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனர்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும், இனமுறுகலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை நீக்குவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுடன் இலங்கை அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்துமாறு தாம் அறிவுறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேஸ்புக் உள்ளிட்டசமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் தினங்களில் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.