கண்டி வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கான ஆரம்பக்கட்ட நிவாரணம் வழங்கி வைப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்கு தலா ஒரு லட்சம் ரூபா கொடுப்பணவும், அவர்களின் இறுதி கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாவும் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் குறித்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிரிழந்தவர்களுக்கும், சேதபடுத்தப்பட்ட சொத்துக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், உயிரிழந்த மூவருக்கும் ஆகக் கூடுதலாக ஐந்து இலட்சம் ரூபா நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் எஞ்சிய தொகையை வழங்குமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வன்முறைச் சம்பவத்தின்போது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.