முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு நேர்ந்துள்ளது. முல்லைத்தீவில் இருந்து செம்மலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் , எதிரே வந்த உந்துருளி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.